» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!

சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)



கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சையின் சொத்து மதிப் பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் சுந்தர் பிச்சை. தமிழ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர் கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார்.

அந்த நிறுவன வளர்ச்சியில் இவரது பங்கு மிக சிறப்பானது. இவரது திறமையால் 2015- ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

சுந்தர் பிச்சை பொறுப் பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமான உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது.

இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை இது வழங்கி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது.

ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப் பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் மேலும் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory