» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!

செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)



அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று கூறிய நியூ யார்க் மேயர் மம்தானிக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 

33 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் தான் சோஹ்ரான் மம்தானி ஆவார். 

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தற்போது நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மம்தானி மேயராக தேர்வானதில் இருந்து அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று நியூ யார்க் மேயர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விஷயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

தேச பக்தன் ஒருவன்Jul 8, 2025 - 06:45:58 PM | Posted IP 172.7*****

நியூ யார்க் இல் இஸ்லாமிய மக்கள் தொகை பெருகி விட்டது அந்த நியூ யார்க் மேயர் ஒரு தீவிரவாத ஆதரவாளர் இஸ்லாமியன், இராக் போரின் போது அங்கு அகதிகளாக வேடம் அணிந்து வந்து குடியேறிய தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்கள் தான் ஓட்டு போட்டு இஸ்லாமிய மேயர் ஐ தேர்ந்தெடுத்து விட்டார்கள், இந்துக்களுக்கு எதிராகவும், யூதர்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தி வருகிறார் கடவுளுக்கே வெளிச்சம். இவர்களை சொந்த இஸ்லாமிய நாட்டுக்கு துரத்தி விட நேரம் வரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory