» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி

வெள்ளி 13, ஜூன் 2025 12:15:19 PM (IST)



தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அனு விஞ்ஞானிகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமில்லாமல், மேலும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருந்தது. இந்த சூழலில், ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி மற்றும் ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய படைகளை ஒருங்கிணைக்கும் தளபதி கோலமாலி ரஷித் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக மேலும் ஒரு தகவலை உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஈரன் மற்றும் இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து

இந்தJun 20, 2025 - 11:36:07 AM | Posted IP 162.1*****

வின் நாயிகள் எல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் செத்து ஒழியட்டும்

naan thaanJun 18, 2025 - 04:07:09 PM | Posted IP 172.7*****

ஆயுத பயன்பாட்டிற்கு அணுசக்தியை பயன்படுத்த உழைக்கும் விஞ்ஞாணிகள் சாக வேண்டியவர்கள் தான் ,,,, எங்க ஐயா டோனி ஸ்டார்க் கே போய்ட்டாரு ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory