» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

வியாழன் 12, ஜூன் 2025 10:59:18 AM (IST)



தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில்  4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 

தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory