» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்!

புதன் 11, ஜூன் 2025 4:56:11 PM (IST)



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து, தான் வெளியிட்ட பதிவுகள் வரம்பு மீறி சென்றுவிட்டதாக தொழிலதிபர் எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். 

குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக போன மாதம் வரை இருந்த எலான் மஸ்க், தற்போது அவரின் எதிரியாக மாறிவிட்டார். இருவரின் சமீபத்திய மோதல்களை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதாவால் நாட்டின் கடன், 200 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எலான் மஸ்க் கூறினார்.

பின்னர், எலான் மஸ்க்குடனான உறவு முடிந்துவிட்டது. அவர் அதிபர் பதவியின் மாண்புக்கு அவமரியாதை செய்துவிட்டார்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து டிரம்ப், எலான் மஸ்க் ஆகிய இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்தனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தது.

தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory