» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கூகுள் மீதான ரூ.421 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது: ரஷியா நீதிமன்றம்

வியாழன் 11, ஏப்ரல் 2024 4:49:10 PM (IST)

கூகுள் நிறுவனத்துக்கு விதித்த ரூ.421 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது என்று ரஷியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது. ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டது.

ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்ஃபாபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு ரூ. 400 கோடி அபராதத்தை மாஸ்கோ நீதிமன்றம் விதித்தது.இந்நிலையில், அபராத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கு குறித்து கூகுள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory