» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் பதிலடி: ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து!!

ஞாயிறு 17, மார்ச் 2024 9:33:38 AM (IST)



உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. 

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ல் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

மேலும் ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்தவகையில் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்தன. அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

அதன்படி நேற்று ரஷியாவின் சமரா, பெல்கோரோட் பிராந்தியங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள ரோஸ்நெப்ட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. அதேபோல் கிரேவோரோன்ஸ்கி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது குண்டுவெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற பஸ் மீது மோதியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory