» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிஏஏ என்பது ஜனநாயகத்தின் உண்மையான வெளிப்பாடு : மேரி மில்பர்ன் புகழாரம்

சனி 16, மார்ச் 2024 12:49:16 PM (IST)

இந்தியாவில் சிஏஏவை நடமுறைப்படுத்தியது உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இந்தநிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் அகதிகள் முகாமில் வசித்து வரும் மக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று சிஏஏ-வை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம் சூட்டி உள்ளார். இது குறித்து எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: சிஏஏ என்பது ஜனநாயகத்தின் உண்மையான வெளிப்பாடாகும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் இது வழங்குகிறது என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory