» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தைவான் அதிபர் தேர்தலுக்கு பிலிப்பைன்ஸ் வாழ்த்து : சீனா கண்டனம்

செவ்வாய் 16, ஜனவரி 2024 4:15:31 PM (IST)

தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு பிலிப்பைன்ஸ் வாழ்த்து கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங் தே-வுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வாழ்த்து கூறியதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தூதருக்கு செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. 

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சீனா உடனான அரசியல் உறுதிமொழிகளை பிலிப்பைன்ஸ் மீறியுள்ளது. மேலும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று பிலிப்பைன்ஸிடம் தெரிவித்துக் கொள்கிறோம். தைவான் பிரிவினைவாதிகளுக்கு தவறான சமிக்ஞைகள் அனுப்புவதை பிலிப்பைன்ஸ் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி பிலிப்பைன்ஸ் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, திங்கள்கிழமை தைவானுடன் இருதரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாகக் கூறி லாய் சிங்குக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் ஜூனியர் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory