» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொலம்பியாவில் நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கி 34 பேர் பலி; 20 பேர் படுகாயம்

திங்கள் 15, ஜனவரி 2024 9:43:10 AM (IST)



கொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதால் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்தநிலையில் குயிட்டோ மற்றும் மெடலினை இணைக்கும் நெடுஞ்சாலை மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த மலைப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்களை மண்குவியல் மூடியது. அங்கு பெய்த தொடர் மழையால் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. எனவே வாகனங்களில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த மண் குவியலில் இருந்து வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தனது இரங்கலை தெரிவித்தார். இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory