» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து; 10 பேர் பலி: சுரங்கத்தின் உரிமையாளர்கள் கைது!

ஞாயிறு 14, ஜனவரி 2024 11:38:47 AM (IST)

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கியாஸ் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உடல் கருகி 10 பேர் உயிரிழந்தனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம் பிங்டிங்ஷான் நகரில் ஒரு நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இந்த சுரங்கம் நேற்று வழக்கம்போல் இயங்கியது. அப்போது 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்தநிலையில் அந்த சுரங்கம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்றொருபுறம் அந்த சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி சுமார் 380 பேர் அந்த சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் உடல் கருகி 10 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சுரங்கத்தில் பலர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கியாஸ் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சுரங்கத்தின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory