» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் 223 தொகுதிகளில் வெற்றி: 5வது முறை பிரதமராகிறார் ஷேக் ஹசீனா...!

திங்கள் 8, ஜனவரி 2024 5:08:48 PM (IST)

வங்கதேசத்தில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கு தேர்தல் பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் 436 சுயேச்சை வேட்பாளர் உள்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அவாமி லீக் கட்சி தலைவியும், வங்கதேச பிரதமருமான ஷேக் ஹசீனா கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஆனால், ஜதியா கட்சி, வங்கதேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் 40 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory