» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கத் தயார்: இஸ்ரேல் அறிவிப்பு

புதன் 3, ஜனவரி 2024 5:32:16 PM (IST)

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப் படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது.  சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. 

'அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை அரசியல் மற்றும் சட்டத்தைக் கொண்டு மறைக்கும் முயற்சி இது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித்தொடர்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.  தென் னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கவிருப்பதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். 

'காஸாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளுக்கு ஒளிந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மட்டுமே இந்த போருக்கு முழு பொறுப்பு' எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 11 மற்றும் 12-ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் இதுவரை 22,000த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

இந்தியன்Jan 4, 2024 - 07:08:45 AM | Posted IP 162.1*****

ஆப்பிரிக்கா நாட்டில் நைஜீரியாவில் BOKA HARAM தீவிரவாதிகள் ஏற்கனவே 3 லட்சம் கிறிஸ்தவ மக்களை கொன்று குவித்துள்ளார், இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட காரணம் நைஜீரியா நாடு இஸ்லாமிய தீவிரவாத நாடாக மாறி வருகிறது. கடவுளுக்கு எல்லாம் தெரியும். இஸ்ரேல் நாடு எப்போதும் தீவிரவாதிகளுக்கு எதிராக நிற்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory