» செய்திகள் - விளையாட்டு » உலகம்

2024ல் செயற்கைக்கோள்கள், அணு ஆயுதங்கள் அதிகரிப்பு : வடகொரியா இலக்கு!

திங்கள் 1, ஜனவரி 2024 10:16:21 AM (IST)

செயற்கைக்கோள்களைச் செலுத்தவும், அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தயாரிக்கவும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இலக்கு நிா்ணயித்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

2024-ஆம் ஆண்டுக்கான அரசின் இலக்குகளைத் தீா்மானிக்க, 5 நாள்கள் நடைபெற்ற ஆளும் தொழிலாளா் கட்சியின் கூட்டம் சனிக்கிழமை (டிச. 30) நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2023-இல் அதிகரித்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போா் ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது.

எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை முறியடிக்க சிறந்த முறையில் நமது ராணுவம் தயாராக இருக்க வேண்டும். 2024-இல் 3-க்கும் அதிகமான ராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். அணு ஆயுதங்களை அதிக அளவில் தயாரிக்கத் தேவையான கட்டமைப்பை நிறுவ வேண்டும். நீா்மூழ்கிக் கப்பல்களின் திறன்களை அதிகரிக்கவும், ராணுவ ட்ரோன்கள் போன்ற நவீன ஆளில்லா தாக்குதல் கருவிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ரத்து செய்வதில் 2019-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அப்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இடையேயான நட்புறவு முறிவடைந்தது. இதையடுத்து, அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதில் அதிபா் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா். அண்மைக்காலமாக சீனா, ரஷியாவுடன் தனது நட்புறவை வடகொரியா அதிகரித்துள்ளது. 

ரஷியாவுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை வழங்கி, இதற்குப் பிரதிபலனாக ரஷியாவின் உயா் தொழில்நுட்பங்களை தனது நாட்டு ராணுவத்துக்காக வடகொரியா பெற்று வருகிறது என அமெரிக்காவும், தென்கொரியாவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நாட்டின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கடந்த நவம்பரில் வடகொரியா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

கந்தசாமிJan 4, 2024 - 07:54:10 AM | Posted IP 172.7*****

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக தெரிவது வடகொரியா மட்டுமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory