» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி; 26 பேர் படுகாயம்!

ஞாயிறு 31, டிசம்பர் 2023 10:26:58 AM (IST)

மெக்சிகோவில் விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர் . 26 பேர் படுகாயம் அடைந்தனர்.  

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் சோனோரா மாகாணத்தில் கேஜெம் நகரில் உள்ள சியுடாட் ஒப்ரெகான் தெருவில் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது அவர்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. இதில் ஏதேனும் ஒரு கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory