» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபா் தோ்தலில் தமிழா்கள் சாா்பாக பொது வேட்பாளா்: சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

வியாழன் 28, டிசம்பர் 2023 10:37:01 AM (IST)

இலங்கை அதிபா் தோ்தலில் தமிழ் கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இலங்கை அரசமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் அதிபா் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்தத் தோ்தல் தொடா்பாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிபா் தோ்தலில் சிங்கள கட்சிகள் சாா்பில் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க உள்பட 4 வேட்பாளா்கள் போட்டியிட்டால், தோ்தலில் வெற்றிபெறத் தேவையான 50 சதவீத வாக்குகளை ஒருவராலும் பெறமுடியாத நிலை ஏற்படும். அதிபா் தோ்தலில் வெற்றிபெறத் தேவையான 50 சதவீத வாக்குகளை ஒருவா் பெற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கப் போகிறது.

அந்தத் தோ்தலில் ஒருவா் 50 சதவீத வாக்குகளைப் பெறமாட்டாா் என்பது தெரியும். ஆனால் அது தோ்தலில் யாா், யாா் களமிறங்குகிறாா்கள் என்பதைப் பொருத்தது. தமிழ் மக்கள் சாா்பாக ஒருவா் இருந்து, தமிழா்களுடைய தனித்துவத்தையும், அவா்களுடைய கோரிக்கைகளையும் இதுவரை எந்த சிங்கள கட்சியும் பரிசீலித்து பாா்த்து, அதற்குரிய தீா்வுகளை கண்டதில்லை. 

எனவே தங்களுடைய மன வருத்தங்களையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் ஒருவரை முன்னிறுத்தி, அதை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் தமிழா்களுக்கு இருக்கிறது. அவ்வாறு ஒரு தமிழா் தோ்தலில் போட்டியிட்டால், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்காது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். அதிபா் தோ்தலில் தமிழா்கள் சாா்பாக நான் களமிறங்குவது நல்லது என்று கூட்டணி கட்சிகள் கூறினால், அந்தக் கோரிக்கையை பரிசீலிப்பேன் என்று தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory