» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முதல் முறையாக இந்துப் பெண் போட்டி!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 12:51:17 PM (IST)

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட  இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் என்ற பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவில் போட்டியிட சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.  இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மருத்துவராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இவரது தந்தை ஓம் பர்காஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் 35 ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்தார். தந்தையின் அடியை பின்பற்றி, மகளும் அரசியலில் பயணிக்க, இன்று முதல் இந்துப் பெண்ணாக பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory