» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 149பேர் உயிழப்பு; கட்டிடங்கள் இடிந்து சேதம்!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 10:08:06 AM (IST)



சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து சேதமானது. 149பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது.

இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது. இதில், கான்சு மாகாணத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனா். சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory