» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச அளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

திங்கள் 25, டிசம்பர் 2023 9:59:26 AM (IST)

சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. கரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory