» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு

திங்கள் 4, டிசம்பர் 2023 10:57:14 AM (IST)



ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை ரத்து செய்யப்பட்டது.. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச்  மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory