» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)

பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பாகிஸ்தானின் 12-ஆவது, 14-ஆவது மற்றும் 20-ஆவது பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீஃப் (73), பனாமா ஆவண முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தால் கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.அதனைத் தொடா்ந்து, அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

சிகிச்சைக்காக கடந்த 2019 அக்டோபரில் லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீஃப் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அப்போது நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைமையில் ஆட்சி மீண்டும் அமைந்தது. தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் நாடு திரும்பினாா்.

பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நவாஸ் ஷெரீஃபை அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து நீதிபதிகள் அமீா் ஃபரூக், மியான்குல் ஹஸன் ஔரங்கசீப் ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்டுள்ள தீா்ப்பில், அவென்ஃபீல்டு வழக்கில் இம்ரானுக்கு எதிரான முறையீட்டை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு திரும்பப் பெற்ால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தில் தீா்ப்பை உறுதி செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory