» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)



இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 12 பிணைக்கைதிகளுக்கு நிகராக 30 பாலஸ்தீனக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. 

9 இஸ்ரேலியப் பெண்களும், ஒரு 17 வயது நிரம்பிய சிறுமியையும்,  தாய்லாந்தைச் சேர்ந்த இருவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் இந்த போர் நிறுத்தத்தில் மேலும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை ஹமாஸ் அமைப்பு 81 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது, இஸ்ரேல் 180 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்தில் துளியும் விருப்பம் கொள்ளாத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் போரை நிறுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போர் துவங்குவதற்குக் காரணமாக இருந்த ஹமாஸ் தாக்குதலில், மொத்தம் 240 பேர் பிடித்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory