» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்: அதிபர் ரணில்உத்தரவு !
திங்கள் 27, நவம்பர் 2023 5:39:21 PM (IST)
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தார்.இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தி ஐசிசி உத்தரவிட்டது.
இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், "கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)










