» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி

சனி 18, நவம்பர் 2023 4:47:09 PM (IST)



சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தோனேசியாவில் 10-வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜகர்த்தா நகருக்கு சென்றார். அவர் நேற்று முன்தினம் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியா மற்றும் வியட்நாமின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்தினார்.

இதன்பின் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில், சிங்கப்பூருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கு' என்னுடைய மனப்பூர்வ அஞ்சலியை செலுத்தினேன் என தெரிவித்து உள்ளார்.

1945-ம் ஆண்டு, 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கான' நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல்லை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டினார். இதன்பின் 1995-ம் ஆண்டில், சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் ஆனது, அதே இடத்தில் இந்திய தேசிய ராணுவத்திற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி நினைவிடம் ஆக்கியது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் மிக பழமையான 1855-ம் ஆண்டையொட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory