» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வரி செலுத்தாததால் பதவியை ராஜினாமா செய்த ஜப்பான் துணை நிதி அமைச்சர்!

திங்கள் 13, நவம்பர் 2023 12:43:02 PM (IST)

ஜப்பானின் துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டா தனது நிறுவனம் வரி செலுத்தவில்லை என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரின் ராஜிநாமா ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கென்ஜி காண்டாவின் ராஜிநாமா கடிதத்தை ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகியிடம் சமர்ப்பித்ததையடுத்து, அவரின் பதவி விலகலை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 

வரி செலுத்தாத காரணத்தால் 2013 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் அரசாங்கம் இவரது நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை நான்கு முறை பறிமுதல் செய்ததாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கென்ஜி காண்டோவே ஒப்புக்கொண்டார்.  

இதனையடுத்து ஜப்பானிய நிதி அமைச்சகத்தில் காண்டா பங்கு வகிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன. கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் பேசிய கென்ஜி, ​​"தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிஸியாகிவிட்டதால், இந்த விவகாரங்கள் குறித்து அறியவில்லை” என்று பேசினார்.

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கென்ஜி காண்டா வரி செலுத்தாதது, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். அதனையடுத்து காண்டா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான கென்டா இசுமி, துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் காண்டா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கடந்த செப்டம்பரில் தனது அமைச்சரவையை மாற்றியமைத்ததில் இருந்து ஏற்கனவே இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலகினர். தாரோ யமடாவுக்கு திருமணத்தை தாண்டிய தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, நாடாளுமன்ற துணைக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சட்டத் துறைக்கான துணை அமைச்சர் மிட்டோ காகிசாவா ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவும் பதவி விலகியுள்ளது அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து

நம்ம ஊருலSep 23, 1700 - 05:30:00 PM | Posted IP 172.7*****

என்றால் என் கிட்டயே வரி கேக்குறியா என்று அடித்து உதைத்து உள்ளே தள்ளி விடுவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory