» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மியான்மரில் ஊழல் குற்றச்சாட்டில் ராணுவ தளபதிக்கு சிறை : நீதிமன்றம் தீர்ப்பு
ஞாயிறு 12, நவம்பர் 2023 3:00:03 PM (IST)
மியான்மரில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் ராணுவ தளபதிக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஆங் சான் சூகி (78) வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இவரது பதவியை ராணுவம் பறித்தது.இதனையடுத்து 2021-ம் ஆண்டு மீண்டும் ராணுவ ஆட்சி அங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் முன்னாள் ராணுவ ஜெனரல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆங் சான் சூகி மற்றும் பிற தலைவர்களை விடுதலை செய்ய கோரி இன்றளவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதி சோ டட் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் மீதான வழக்கு மியான்மரில் உள்ள ராணுவ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சோ டட் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடந்த 2½ ஆண்டு ராணுவ ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இரு ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சோ டட்டுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)










