» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசா விவகாரத்தில் அதிருப்தி : ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் ராஜினாமா

புதன் 1, நவம்பர் 2023 10:37:58 AM (IST)

காசா விவகாரத்தில் ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்து  ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் ராஜினாமா செய்துள்ளார். 

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory