» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம்!
வியாழன் 5, அக்டோபர் 2023 11:44:03 AM (IST)

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி என்பவர் சபாநாயகராக இருந்து வந்தார். இவர் சமீபகாலமாக ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்து வருவதாக குடியரசு கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
மேலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொது செலவின மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மீது குடியரசு கட்சியினர் நம்பிக்கை இழந்தனர். இந்த நிலையில் அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடந்தது.
அதன்பிறகு தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்கள் தவிர மற்ற அனைவரும் கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தனர். அந்த வகையில் 218-208 என்ற வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது. இதன் மூலம் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 234 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)










