» செய்திகள் - விளையாட்டு » உலகம்

2023ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு : விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

புதன் 4, அக்டோபர் 2023 5:47:55 PM (IST)



2023ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. வேதியியல் விஞ்ஞானிகள் மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory