» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒரே நாளில் 29 ரஷிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் : உக்ரைன் அறிவிப்பு!
புதன் 4, அக்டோபர் 2023 10:54:25 AM (IST)

ஒரே நாளில் ரஷியாவின் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஈரானின் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவை எனவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் ஆற்றல் தொடர்பான உள்கட்டமைப்புகளின் மீது ரஷியா தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீதான தாக்குதல்களால் உக்ரைன் கடந்த ஆண்டு பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷியா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் விமானப் படை தரப்பில் கூறியதாவது: ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைன் மீது 31 ஆளில்லா விமானங்களைக் கொண்டும், இஷ்கந்தர்-கே ஏவுகணையைக் கொண்டும் தாக்கினர். இந்தத் தாக்குதலில் நாங்கள் 29 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷியா மீதான தடைகளை அதிகப்படுத்துமாறு உக்ரைன் அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)










