» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)



கனடாவில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 75 அடி உயரத்தில் தலைகீழாக மக்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாகான் நகரில் கனடா வொண்டர்லேண்ட் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் லம்பெர்ஜேக் எனப்படும் 360 டிகிரி கோணத்தில் சுற்றக்கூடிய ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினத்தில் 48 பேர் ஒரே நேரத்தில் விளையாடலாம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10.40(உள்ளூர் நேரம்) மணியளவில் மக்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியபடி நின்றதால் மக்கள் அச்சத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.

உடனடியாக தொழில்நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ராட்டினத்தில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டது. சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு 11.05 மணியளவில் ராட்டினத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.இதில், இருவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் உடனடியாக சிகிச்சை அளித்தது. மீதமுள்ள மக்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory