» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவைவிட கொடூர வைரஸ் வைரஸ் பரவும் அபாயம்: சீன வைராலஜிஸ்ட் எச்சரிக்கை!

திங்கள் 25, செப்டம்பர் 2023 4:11:06 PM (IST)

எதிர்காலத்தில், கரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் அபாயமிருப்பதாக சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எச்சரித்துள்ளார்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் பற்றிய ஆய்வின் மூலம் புகழ்பெற்றவர்  ஷி ஸெங்லி. ஆங்கில திரைப்படத்தின் பேட் உமன் என்ற பெயரால் இவர் அறியப்படுகிறார். ஒட்டுமொத்த உலகமும், கரோனாவை விட அதிக அபாயம் நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்தின், உருவெடுக்கும் தோற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இவர் உள்ளார். இவர் கரோன தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.இவரது குழுவினர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், 40 வகையான கரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவிருப்பதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்டவை மிகவும் அபாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பயங்கர நிகழ்வுகள் தாக்கக் கூடும் என்றும் உலகத்தை இந்த ஆய்வுக் கட்டுரை எச்சரித்துள்ளது.அதிகரிக்கும் வைரஸ்கள், மக்கள் தொகை, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வுகளுக்காக, வூஹான் ஆய்வுக்கூடம், மிக மோசமான வைரஸ்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதாகவும், அமெரிக்கா அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஃபெடரல் அமைப்பு திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory