» செய்திகள் - விளையாட்டு » உலகம்

24 மணி நேரமும் படுத்தே இருக்க வேண்டும்! சோம்பேறி பட்டத்திற்கு போட்டா போட்டி!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 5:34:38 PM (IST)



மாண்டினீக்ரோ நாட்டில் 24 மணி நேரமும் படுத்தே இருக்கும் 'சோம்பேறிக் குடிமகன்' என்ற விநோத போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டினீக்ரோவில், 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல், 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தே இருக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் முக்கிய விதிமுறையாகும்.

போட்டியாளர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ கூடாது. இதனை மீறினால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அதே சமயம் போட்டியாளர்கள் செல்போன், லேப்டாப் பயன்படுத்தவும், புத்தகம் படிக்கவும் அனுமதி உண்டு.

சுமார் ஒரு மாத காலமாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 பேர் மெத்தையில் படுத்தபடி வெற்றிக்காக 'போராடி' வருகின்றனர். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தோடு, 1,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000) பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory