» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு: 2பேர் பலி!

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 5:31:44 PM (IST)

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் ராணுவ மேஜர் உட்பட 2பேர் உயிரிழந்தனர்.  7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள ஆஸ்பத்திரி வளாகம் அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தை குறிவைத்து மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர்.

இதில் அந்த வாகனம் வெடித்து சிதறியதில்,  ராணுவ மேஜர் மற்றும் ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். மேலும் துணை ராணுவத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory