» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிலவுக்கு வெற்றிகரமாக ராக்கெட் அனுப்பியது ஜப்பான்!

வியாழன் 7, செப்டம்பர் 2023 10:50:34 AM (IST)



ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவுக்கு  எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory