» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது: அமெரிக்க அதிபர் கருத்து

திங்கள் 4, செப்டம்பர் 2023 5:50:04 PM (IST)

ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் வருகை தரவுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்ற செய்தியறிந்து ஏமாற்றமடைந்துள்ளேன்.

ஜி-20 மாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். எனது இந்தியா பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாமுக்கும் செல்கிறேன்’ என்றார். ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காத நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லஃபரோவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டின் பிரதமர் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory