» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது: பொதுமக்கள் போராட்டம்

ஞாயிறு 3, செப்டம்பர் 2023 11:36:18 AM (IST)



பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசாங்கம் கடன் கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மானியங்களை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்து இருக்கிறது. அதன்படி அங்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது.

இந்தநிலையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.91 அதிகரித்து ரூ.305.36 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் ரூ.18.44 உயர்த்தப்பட்டு ரூ.311.84 ஆக உயர்ந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் வர்த்தக தலைநகரான கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory