» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் விமானிகள் தொடர்ந்து ராஜினாமா: விமான நிறுவனத்துக்கு நெருக்கடி..!!
செவ்வாய் 29, நவம்பர் 2022 12:02:05 PM (IST)
இலங்கையில் விமானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பலர் வேலையிழந்ததுடன், வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசுக்கு செந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றும் விமானிகளும் சம்பள பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சினைகளால் விமானிகள் பணியில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
கரோனாவுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் 318 விமானிகள் பணியில் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 235 ஆக குறைந்து விட்டது. இது விமான நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நுடாலும் கவலை தெரிவித்து உள்ளார். கொரோனாவுக்கு பின் இலங்கையின் சுற்றுலாத்துறை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், விமானிகளின் இந்த வெளியேறுதல் அரசுக்கு தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் போர் முடிவுக்கு வராததற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு
புதன் 25, ஜனவரி 2023 11:05:35 AM (IST)

அமெரிக்காவில் அடுத்தடுத்து 3 இடங்களில் துப்பாக்கிசூடு : உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு
செவ்வாய் 24, ஜனவரி 2023 10:30:56 AM (IST)

இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா 3நாட்கள் நடைபெறும்: பக்கிங்ஹாம் அரண்மனை
திங்கள் 23, ஜனவரி 2023 10:34:58 AM (IST)

இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை கிடையாது : இங்கிலாந்து அமைச்சர் திட்டவட்டம்
திங்கள் 23, ஜனவரி 2023 10:26:42 AM (IST)

காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!
சனி 21, ஜனவரி 2023 4:49:47 PM (IST)

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு; 3ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
சனி 21, ஜனவரி 2023 11:58:42 AM (IST)
