» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

வெள்ளி 8, ஜூலை 2022 11:02:18 AM (IST)

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். நரா நகரில், ஷின்சோ அபே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது . மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், "நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா" செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory