» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!
சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையதிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதையடுத்து தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சஜீத் மஜீத் என்பவரையும் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மஜீத் தொடர்பான வழக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மஜீத் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி மஜீத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மஜீத் சிறையில் அடைக்கப்பட்டான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது கொலை வெறி தாக்குதல்
சனி 13, ஆகஸ்ட் 2022 11:36:52 AM (IST)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)
