» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு : வாகா எல்லையில் ஒப்படைப்பு!
செவ்வாய் 21, ஜூன் 2022 5:24:55 PM (IST)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டு வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது.
கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது கொலை வெறி தாக்குதல்
சனி 13, ஆகஸ்ட் 2022 11:36:52 AM (IST)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)
