» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:36:24 AM (IST)

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட திமுக எம்.பி.க்கள், கைது நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)








