» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

சனி 25, ஜூலை 2026 3:44:23 PM (IST)

DharmendraPradhan.jpg

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்தார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் ஏற்பட்ட மோதலில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இப்போராட்டம் 36 நாட்களை எட்டிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரைவு நீதிமன்றம் (Fast Track Court) அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்த நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். 

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: "கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்த்து ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளேன். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தடைகளை உருவாக்கவும் மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றனர்.

இந்தியாவின் இளைஞர் சக்தியே நாட்டின் உண்மையான பலம். நாட்டின் இளைஞர்கள் குழப்ப வலையில் சிக்கிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நம் கடமை. தற்போதைய சூழலைத் தேசவிரோதச் சக்திகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

பிரதமரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவை எனது வாழ்வின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

vetrivelJul 25, 2026 - 04:02:29 PM | Posted IP 172.7*****

வேறு வழி இல்லை நிலைமை கை மீறி போகும் பொழுது அதை சரி செய்யும் அதை கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும் அந்த இடத்தில் யாராக இருந்தாலும் இந்த நிலை தான் ஏற்படும் பிடிவாதம் பிடிக்காமல் இறங்கி வந்து பதவியை ராஜினாமா செய்தது வரவேற்கத்தக்கது உடனடியாக நீட் பிரச்சனைக்கு இந்தியாமுழுவதும் எளிமையான தீர்வை கண்டே ஆக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory