» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் விவகாரம்: மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அதிரடி மாற்றம் – சிறப்பு நீதிபதி நியமனம்!

வெள்ளி 24, ஜூலை 2026 12:53:51 PM (IST)

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளரை உடனடியாக மாற்றம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) உள்ளிட்ட அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்வி அமைச்சகத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், மத்திய அரசு நேற்றிரவு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
புதிய செயலாளராக நரேஷ் பால் கங்க்வார் நியமனம்:

அதன்படி, மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினித் ஜோஷி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார், புதிய மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அறிவித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory