» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)
ஆந்திர மாநிலம் நகரி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த சிமெண்ட் வியாபாரி, பின்னர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நாராயணவனம் மண்டலம் வெங்கடகிருஷ்ணா பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (45). இவர் சிமெண்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஹரிதா (33) அழகு நிலையம் நடத்தி வந்தார். இவர்களுக்குக் கௌசிக் (14) என்ற மகனும், ஹரிணி (12) என்ற மகளும் இருந்தனர். மோகன் தனது தாய் சந்திரகலாவுடன் (65) ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மோகனின் மைத்துனர் பாலகிருஷ்ணா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அக்காள் ஹரிதாவும், தாய் சந்திரகலாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மோகனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மாயமான மோகன் மற்றும் அவரது இரு குழந்தைகள் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மோகன் தனது தாய் மற்றும் மனைவியைக் கொன்றுவிட்டு, குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நஷ்டம் காரணமா அல்லது குடும்பத் தகராறா? இந்த விபரீத முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஞாயிறு 10, மே 2026 8:48:44 PM (IST)

திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு - தேவஸ்தானம் அறிவிப்பு!
ஞாயிறு 10, மே 2026 8:42:50 PM (IST)

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது
சனி 9, மே 2026 11:35:05 AM (IST)










