» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்: அகிலேஷ் யாதவ் கிண்டல்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:35:28 PM (IST)

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வெளிநாட்டுப் பயணம் குறித்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 3 நாள் அரசுமுறைப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றார். அங்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் நவீன உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் மூலம் உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்ய ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மாநிலத்தின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
அகிலேஷ் யாதவின் கிண்டல்
முதலமைச்சர் யோகியின் ஜப்பான் பயணம் குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது: "சிலர் ஜப்பானுக்குச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். ஜப்பானை 'நிப்பான்' என்றும் அழைப்பார்கள். பெயர் மாற்றம் செய்வதில் வல்லவரான ஒரு முதலமைச்சர் நம் நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பதற்காக ஜப்பான் மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என நம்புகிறேன்."
மேலும், உத்தர பிரதேசத்தில் பல்வேறு நகரங்களின் பெயர்கள் மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், "யோகி ஆதித்யநாத் ஜப்பானை 'ஆதித்யாபூர்' அல்லது 'ஆதித்யாபுரம்' எனப் பெயர் மாற்றிவிடுவார். அப்படி இல்லையென்றால் அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப மாட்டார் என நம்புகிறேன்" என்று கிண்டலாகத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகட்டும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:19:26 AM (IST)

திமுகவின் நோக்கம் அரசியல் ஆதாயம் மட்டுமே - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:45:09 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்: ராகுல் புறக்கணிப்பு? திமுக கூட்டணியில் சலசலப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:32:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)






