» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்

சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்கி இருக்கும் அதேநேரத்தில், நாட்டின் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான ஒரு இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பரந்த அளவில் இருப்பதை பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘இந்திய - அமெரிக்க இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பு, இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்க ஆதரவு அளிக்கும்.

மேலும், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கான செலவுகளைக் குறைக்கும். இந்த இடைக்கால ஒப்பந்தம், டிஜிட்டல் சேவைகள் துறையில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும். கூட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இந்தியாவை செயற்கை நுண்ணறிவு, தரவு, டிஜிட்டல் சேவைகளுக்கான ஒரு மையமாக நிலைநிறுத்தும்.

இந்தியா தனது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது. முக்கிய விவசாயப் பொருட்கள் மற்றும் பால் பண்ணைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாத்து, விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்துகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி அதிரிக்கும் என்றும், இதன் காரணமாக லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ் இந்தியா, அமெரிக்காவுடன் ஓர் இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனர்கள் உள்ளிட்டோருக்கு 30 டிரில்லியன் டாலர் சந்தையை திறக்கும். இதனால் ஏற்றுமதி அதிரிக்கும். நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா, இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா 18% ஆகக் குறைக்கும். இது அமெரிக்கா எனும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தில், ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்ககள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்பை வழங்கும்.

கூடுதலாக, பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உட்பட பரந்த அளவிலான பொருட்களுக்கான வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதன்மூலம், இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் மேம்படுத்தப்படும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் வலுப்பெறும்.

இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்த உதவும். இது நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சியை அளிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory