» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிவசேனா கட்​சியை பிரதமர் மோடி உடைத்தார் : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

வெள்ளி 9, ஜனவரி 2026 4:59:21 PM (IST)

பிரதமர் மோடிக்கு இரு​முறை உதவி செய்​த​ போ​தி​லும் அவர் எனது சிவசேனா கட்​சியை உடைத்தார் என்று உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/udhavthakre_1767958122.jpgகடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்​டாக உடைந்​தது. தற்​போது உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணியும், மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையில் மற்​றொரு அணி​யும் செயல்​படு​கின்​றன.

இதுதொடர்​பாக உத்​தவ் தாக்​கரே பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: "கடந்த 2014, 2019ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்​காக நான் தீவிர பிரச்​சா​ரம் செய்​தேன். இரு​முறை மோடிக்கு உதவி செய்​த​ போ​தி​லும் அவர் எனது கட்​சியை உடைத்தார். அவர் பிரதம​ராக வேண்​டும் என்று நான் வலியுறுத்தினேன்.

ஆனால் நான் அழிக்​கப்பட வேண்​டும் என்று அவர் கூறுகிறார். மகா​ராஷ்டி​ரா​வில் இருந்து மும்​பையை பிரிக்க வேண்​டும் என்​பது பாஜக​வின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறு​வனர் பால் தாக்​கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்​தார். அவர் வாழ்ந்த காலத்​தில் பாஜக வளைந்து நின்​றது. தற்​போது அவர் உயிரோடு இல்​லாத சூழலில் காகித அளவில் சிவசே​னாவை அழித்துவிட்டனர்.

ஆனால் மக்​களின் மனங்​களில் இருந்து சிவசே​னாவை அழிக்க முடி​யாது. அரசி​யல் நாகரி​கத்தை மீறி பாஜக செயல்​படு​கிறது. 20 ஆண்​டு​களுக்கு பிறகு நானும் ராஜ் தாக்​கரே​வும் ஒன்​றிணைந்​துள்​ளோம். இனிமேல் நாங்​கள் ஒரு​ போதும் பிரிய மாட்​டோம். இவ்வாறு உத்​தவ்​ தாக்​கரே தெரி​வித்​துள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory