» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி: பினராயி விஜயன் உத்தரவு!!
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:30:49 AM (IST)
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் 555 பேர் வாங்கிய ரூ. 18.75 கோடி கடனை கேரள அரசே திருப்பிச் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம்,வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த 2024 ஜூலை 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ஏராளமான வீடுகள் புதைந்து 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளின் துணையுடன் கேரள அரசு உதவி வருகின்றது.
வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக முடிக்கப்பட்ட வீடுகளை கேரள அரசு இம்மாதம் ஒப்படைக்கவுள்ளது.இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 பேர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ. 18.75 கோடி மதிப்பிலான 1,620 கடன்களை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஏற்கெனவே கேரள வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ. 93 லட்சம் கடனையும் திருப்பி செலுத்த மாநில அரசு முன்வந்துள்ளது. மக்களின் கடன் மதிப்பீடுகள் பாதிக்காத வகையில் வங்கிகளின் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம்,வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த 2024 ஜூலை 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ஏராளமான வீடுகள் புதைந்து 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளின் துணையுடன் கேரள அரசு உதவி வருகின்றது.வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக முடிக்கப்பட்ட வீடுகளை கேரள அரசு இம்மாதம் ஒப்படைக்கவுள்ளது.இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 பேர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ. 18.75 கோடி மதிப்பிலான 1,620 கடன்களை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஏற்கெனவே கேரள வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ. 93 லட்சம் கடனையும் திருப்பி செலுத்த மாநில அரசு முன்வந்துள்ளது. மக்களின் கடன் மதிப்பீடுகள் பாதிக்காத வகையில் வங்கிகளின் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)

நாட்டின் தனியுரிமையுடன் விளையாட முடியாது: சமூக ஊடகங்களுக்கு உயர்நீதிமன்ற ம் எச்சரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 4:05:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த விவகாரம் : பிரதமர் மோடி கருத்து!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:32:08 PM (IST)

பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்: அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் மக்களவையில் கூச்சல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:03:26 PM (IST)

அந்தமான் –நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஆய்வு மையம் தகவல் தேசிய
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:21:43 AM (IST)

ஈரானுக்குப் பதில் வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் : டிரம்ப்
திங்கள் 2, பிப்ரவரி 2026 10:34:10 AM (IST)









