» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

சட்​ட​விரோத தகவல்​கள், படங்​கள், வீடியோக்​களை பதிவேற்​றும் செய்​தால் பயனர்களின் கணக்​கு​களுக்கு நிரந்​தர​மாக தடை விதிக்​கப்​படும் என்று எக்ஸ் தளம் எச்சரித்துள்ளது.

எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். 

மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் எக்ஸ் தளம் கிரோக் ஏ.ஐ.யை பயன்படுத்தி பெண்களின் ஆபாச படங்கள், பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்கியவர்களின் கணக்குகளை தெரிவு செய்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரோக் ஏஐ செயலியை பயன்​படுத்​துபவர்​கள் சட்​ட​விரோத தகவல்​கள் மற்​றும் படங்​களை பதிவேற்​றம் செய்​தால் கடும் விளைவு​களை சந்​திக்க நேரிடும். சட்​ட​விரோத தகவல்​கள், படங்​கள், வீடியோக்​களை பதிவேற்​றும் செய்​பவர்​களின் கணக்​கு​களுக்கு நிரந்​தர​மாக தடை விதிக்​கப்​படும்” என்று எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory